/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SHANKAR JIWAL3232332.jpg)
பெருநகர சென்னை காவல்துறை இன்று (28/01/2022) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், சென்னை, கீழ்ப்பக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், வினோஜ் P. செல்வம் என்பவர் தன்னுடைய ட்விட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். மேற்கண்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கானது புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளைத் திரித்தும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. எச்சரித்துள்ளார்.
Follow Us