/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI POLICE444.jpg)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (19/10/2021) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., நேரில் சந்தித்து, காவல்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றதற்காக வாழ்த்துப் பெற்றார்.
கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாகத்தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து குணமான பிறகு தற்போது பணியைத்தொடர உள்ள நிலையில் இன்றுமுதலமைச்சரைச் சந்தித்து பதவி உயர்வுக்காக வாழ்த்துப் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us