






Published on 30/10/2021 | Edited on 30/10/2021
ஆண்டுதோறும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகளுக்காக ‘காவலர் வீர வணக்க நாள்’அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று (30.10.2021) மெரினா, காந்தி சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அதன் பின்னர் பணியின் போது இறந்த காவலர்கள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.