Commissioner of Police pays a surprise visit ..! Tense guards

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

கடந்த ஜூலை மாதம் இதேபோன்று லால்குடி காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி, பணியில் அலட்சியமாக இருந்த உதவி ஆய்வாளர் உட்பட 16 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், மீண்டும் இரண்டு மாதத்திற்குப் பிறகு அதே காவல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றதால், காவலர்கள் மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்லக்குடி காவல் நிலையம் சென்று அங்கும் பதிவுசெய்த குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட கோப்புகளை ஆய்வு செய்தார்.