தமிழகத்தில் கரோனாவின் பரவல் அதிகமாக இருக்கிற நிலையில், அரசு சார்பில் பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மக்கள் பாதுகாப்பையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. அவற்றையும் மீறி பலரும் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அசாதாரணமாகசெயல்பட்டு வருகின்றனர்.
அதனை தடுக்கும் நோக்கில் மாநகராட்சி சார்பிலும், காவல்துறையின் சார்பிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் போக்குவரத்து காவல்துறையினரின் கரோனா தடுப்பு விழிப்புணர்வையும், இருசக்கர வாகன பேரணியையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கிவைத்தார்.