
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகரம் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தை ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காவல்நிலைய கோப்புகளை ஆய்வு செய்தும் காவல்நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோப்புகளை பற்றி தக்க அறிவுரை வழங்கினார். நிலுவையில் உள்ள வழக்குகளின் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.

பின்னர் காவல்நிலையத்தை சுற்றி பார்வையிட்டும் கரோனா காலங்களில் காவல் நிலையத்தை சுத்தம் மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள காவல் ஆய்வாளருக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
மேலும் காவல் ஆளினர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தரையும் கரோனா காலங்களில் தற்காத்துக்கொள்ளவும், முகக்கவசம் அணிந்து பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார். மேலும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக காவல் ஆய்வாளர், காவல்ஆளினர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் பொதுமக்களிடையே கரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுரை வழங்கினார்.
அதன் பின்னர் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையம் அருகில் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியும், மேலும், திருச்சி மாநகரில் முனைப்புடன் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.