Advertisment

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டிய ஆணையர்!

Commissioner congratulates medalists in sniper competition

சென்னையில் கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பல்வேறு மண்டலங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என 300 பேர் கலந்து கொண்டனர். இதில் கார்பன் ஐஎன்எஸ்ஏஎஸ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

Advertisment

இதில் மத்திய மண்டலம் சார்பில் கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் உட்பட 10 காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு போட்டியில் பங்கேற்றனர். இதில் 3 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என பதினொரு பதக்கங்களை வென்றனர். இதில் ரிவோவெர் 40 யார்ட்ஸ் சுடும் போட்டியில் கலந்து கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தம் தங்கம் வென்றார்.

Advertisment

மேலும் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பரமசிவம் ஸ்னாப் ஷாட் 300 யார்ட்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களை மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் பாராட்டினர்.

police Commissioner trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe