Commission orders fine of Rs 13 lakh 55 thousand for cheating

கடலூர் மாவட்டம், நெய்வேலிவடக்குவெள்ளூரைசேர்ந்த ஸ்டாலின் என்பவரின் மனைவிஅழகுமதி(33). இவர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நெய்வேலி 25வது வட்டத்தைச் சேர்ந்த வீட்டுமனை விற்பனையாளர்சிவராஜன்என்பவரிடம் ஒரு மனையை வாங்குவதற்காக மாதத் தவணை ரூபாய் 2000 வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் செலுத்தி இருந்தார். ஆனால் அவர் கூறியபடி பணத்தை வாங்கிக்கொண்டு மனையைகிரையம்செய்து தரவில்லை. இதேபோல நெய்வேலிடவுன்ஷிப்9-ஆவதுவட்டத்தைச்சேர்ந்தசேதுமணி(54), சந்திரசேகர்(57) ஆகிய 2 பேரும் தலா 3 மனைகள் வாங்குவதற்காகசிவராஜனிடம்தலா 3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தினர். இவர்களுக்கும் மனையைகிரையம்செய்து வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

Advertisment

இதையடுத்து இவர்கள் 3 பேரும் தங்களுடையபணத்தைத்திருப்பி கேட்டதற்கு அவர் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும்தனித்தனியாககடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆணைய தலைவர் உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

Advertisment

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று 3 பேர் கொண்ட குழுவினர் தீர்ப்பளித்தனர். அதில் இவ்வழக்கில் மனை உரிமையாளர்சிவராஜன்அழகுமணிக்குரூபாய்ஓருலட்சத்து 20 ஆயிரத்தை 13.11.2017 தேதியிலிருந்து 24 சதவீத வட்டியுடன் தொகை செலுத்தும் தேதி வரை அளிக்கவும், மன உளைச்சலுக்கு ரூபாய் ஒரு லட்சம், வழக்கு செலவு ரூபாய் 5 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர். இதேபோல்சேதுமணி, சந்திரசேகருக்கு தலா 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு 24 சதவீத வட்டியுடன் வழங்கவும், மன உளைச்சலுக்கு தலா ஒரு லட்சமும், வழக்கு செலவுக்கு தலா 5 ஆயிரமும் என மூன்று பேருக்கும்சிவராஜன்மொத்தம் ரூபாய் 13 லட்சத்து 55 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.