Advertisment

8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து: ஆம் ஆத்மி தமிழக ஒருங்கிணைப்பாளர் கைது..!

vaseekaran

Advertisment

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான அறிக்கை மற்றும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மக்களை கொல்லும் இந்த நாசகார திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்நிலையில் வசீகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள சேலம் தீவட்டிபட்டி போலீஸார் அவரை கைது செய்வதற்காக சேலத்திலிருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து, சென்னை மதுரவாயலில் உள்ள வசீகரன் வீட்டிற்கு வந்த சேலம் போலீசார் வசீகரனை கைது செய்து சேலம் அழைத்து சென்றனர்.

8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தமிழக அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. முன்னதாக 8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

aap green corridor project
இதையும் படியுங்கள்
Subscribe