Advertisment

சாமி மலையில் நம்மாழ்வாருக்கு நினைவேந்தல் அனுசரிப்பு!

commemorative for nammalvar

சாமி மலையில் இயற்கை காப்பு போராளி கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் கருத்தரங்கம் சாமி மலை சுற்றுவட்டார உழவர்கள் சார்பாக நேற்று ( 30.12.2021) மாலை சாமி மலை ராசி திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு அ.ச.இராசேந்திரன் திருவலஞ்சுழி தலைமை தாங்கினார்.

Advertisment

சாமிமலை சுற்றுவட்டார உழவர்கள் ஆ.நல்லதம்பி, கு.அர்சுணன் சிங், ப.பாரதி தாசன், பழ.மணிகண்டன் , கி.அய்யப்பன், சு.சண்முகம், த.பாலசந்நர், ந.சுரேசு முன்னிலை வகித்தனர். நினை வேந்தல் கருத்துரை செந்தமிழ் மரபு வழி வோளாண் நடுவம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன் , செந்தமிழ் மரபுவழி வேளாண்மை நடுவம் அமைப்பாளர் க.முருகன் விவசாயி, இயற்கை விவசாயி ஏரகம் சுவாமி நாதன், பா.திருஞானம் உழவர் முன்னணி கடலூர் மாவட்ட பொறுப்பாளர், பி.வேல்முருகன் கடலூர் மாவட்ட உழவர் முன்னணி பொறுப்பாளர் மணிமாறன் கருத்துரையாற்றினார். நிகழ்வை க.விடுதலைசுடர், க.தீந்தமிழன் ஒருங்கிணைத்தார்கள். மா.இளமுருகன் நன்றியுரையாற்றினார். இதில் பெருதிரளாக உழவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

samimalai nammalvaar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe