/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NLC - Condolence 3.jpg)
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி, 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன்வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த17 பேரில் 8 பேர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதையடுத்து கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில்உயிரிழந்த 14 தொழிலாளர்களின் நினைவாக,அவர்களின் தியாகத்தைப்போற்றும் விதமாக இன்று மாலை 07.00 மணியிலிருந்து 07.10 வரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் சார்பாக தீபம் ஏற்றி வழிபாடும்,மவுன அஞ்சலியும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NLC - Condolence 1.jpg)
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அலுவலகங்களிலும் தீபமேற்றி, மெழுகுவர்த்தி சுடரேந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)