Advertisment

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிகளில் எல்லா இடங்களிலும் ஊழல் நிலவியது. முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்த அதிமுக எம்பிக்கள் தடையாக உள்ளனர்.

தமிழக அரசை கலைக்கும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை. இருப்பினும் விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வந்தாலும் வரலாம். தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.