s1

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

கடந்த சனிக்கிழமை திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமானை வரவேற்க ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

வைகோ, சீமான் வந்தபோது இருவரையும் அவர்களது தொண்டர்கள் வரவேற்றபோது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பற்று அது மோதலில் முடிந்தது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி விமான நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சீமானை கைது செய்ய திருச்சி போலீசார் சென்னை வந்துள்ளதாக தகவல்.

இந்நிலையில் சீமான், லஜபதிராய், நெல்லை சிவா, திருச்சி மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு ஆகிய 4 பேருக்கும் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று வக்கீல் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.