ADVERTISEMENT

சரக்கு வேண்டுமா... இடைவெளி விட்டு கோட்டில் வாங்க...  டாஸ்மாக் வினோதம்

10:33 PM Mar 20, 2020 | kalaimohan

கரோன வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதன் ஒரு பகுதியாக ஜவுளி கடைகள் ,நகை கடைகள், மதுபான பார்கள், பைவ் ஸ்டார் ஹோட்டல்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவை மூடப்பட்டு வருகிறது அந்த வரிசையில் தான் இதுவும்,

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலிருந்து குளூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நிற்காமல் பத்தடி இடைவெளி விட்டு நிற்பதற்காக கோடுகள் வரையப்பட்டன. மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்கள் எதற்காக இந்த கோடு போட்டு விட்டீர்கள் என டாஸ்மாக் ஊழியரிடம் கேட்க, கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு எச்சரிக்கை நடவடிக்கைதான் இது.

ADVERTISEMENT


உங்களுக்கு சரக்கு வேண்டுமென்றால் ஒருவரை ஒருவர் தொடாமல் வரவேண்டும், ஒரு மீட்டர் அளவுக்கு தள்ளி நின்று வாருங்கள். அப்படி வருபவர்களுக்கு தான் சரக்கு கிடைக்கும் எனக் கூறினார்கள். வேறு வழியில்லாமல் குடிமகன்கள் அந்த கோட்டை ஒவ்வொருவராக கடந்து வந்து மதுபாட்டில்கள் வாங்கினார்கள். அப்போது ஒரு குடிகாரர் நான் கோட்டை தாண்ட மாட்டேன் எனக்கும் மது வேண்டும் என அடம் பிடிக்க... நீ கோட்டை தாண்டினாலும் சரிதாண்டா விட்டாலும் சரி உனக்கு சரக்கு கிடையாது என ஊழியர்கள் கூற, என்னால் நடக்க முடியாது இப்போது இங்கு வந்து விட்டேனே என கடை முன்பு வந்து அடம்பிடித்து சரக்கு வாங்கி சென்றார்.


டாஸ்மாக்கில் கோடு போட்டு இடைவெளிவிட்ட இந்த சம்பவம் குடிகாரர்கள் மத்தியில் வினோதமாகவும், வியப்பாகவும் இருந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT