Comedian Bonda Mani passed away

Advertisment

சென்னையில் உள்ள வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் போண்டாமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் போண்டாமணி அதனைத் தொடர்ந்து வடிவேலு, கவுண்டமணி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில் பல்வேறு காட்சிகளில் கலக்கியிருந்தார்.குசேலன், சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.

இந்நிலையில் அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போண்டா மணி வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில் இன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

நடிகர் போண்டாமணியின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.