Advertisment

இலங்கைக்கு வாருங்கள்! மு.க.ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisment

அதில், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழி நடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

C. V. Vigneswaran - MK Stalin

தி.மு.க. உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது, தி.மு.க. செயல்பட்ட விதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும், கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்துக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக நீங்கள் இலங்கைக்கு வருகை தர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

C. V. Vigneswaran mk stalin srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe