Advertisment

'என்னோட வா... ஒரு நாளைக்கு 2 ஆயிரம் தர்றேன்' கடைக்காரரை கலாய்த்த யாசகர்! 

'Come with me .. I will give you 2 thousand a day'

என்னோட வா.. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் சம்பளம் தர்றேன்' என யாசகம் கேட்ட இளைஞருக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே நடந்த உரையாடலின் வீடியோ, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஈரோட்டில் உள்ள சாலையில், தங்களது உடலில் சாட்டையால் அடித்துக்கொண்டு யாசகம் கேட்கும் இளைஞர் ஒருவர், கடைக்காரர் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்கிறார். அதற்கு அந்த கடைக்காரர், 'கை, கால் எல்லாம் நல்லத் தானே இருக்குது.. என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன்" என கூறி உள்ளார்.

Advertisment

வந்தால் எவ்வளவு சம்பளம் தருவீங்க என அந்த இளைஞர் கேட்கிறார். அதற்கு அந்த கடைக்காரரோ, '400 ரூபாய்.. ஒரு நாளைக்கு தருகிறேன்' என கூறுகிறார். இதைக்கேட்டு, கடுப்பான அந்த இளைஞர், '400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 ரூபா சம்பாதிக்கிறேன்' என பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர், 'இப்படி ஓசியா கொடுத்தால், நீ சம்பாதிக்க தான் செய்வாய்' என கூறுகிறார். காசு இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். வேணுமென்றால், நீ வா என்னோடு.. உனக்கு 2000 ரூபா சம்பளம்நான் தருகிறேன் எனக் கூறியபடி, அந்த பிச்சை எடுக்கும் நபர், அங்கிருந்து செல்கிறார்.

அந்தக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள், இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Beggar shops Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe