திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று நல்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், கலைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

Advertisment

கலைஞரின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்து ஆளுநர் புறப்பட்டார்.