திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர்.
மருத்துவமனையின் முன்பு குவிந்த தொண்டர்கள்,
எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா...
எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா...
அறிவாலயம் போகலாம் வா... அறிவாலயம் போகலாம் வா...
அறிவாலயம் போகலாம் வா... அறிவாலயம் போகலாம் வா...
அறிவாலயம் வா தலைவா... அறிவாலயம் வா தலைவா...
அறிவாலயம் வா தலைவா... அறிவாலயம் வா தலைவா...
வாழ்க வாழ்க வாழ்கவே...
டாக்டர் கலைஞர் வாழ்கவே...
என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.