Advertisment

அண்ணனின் மனைவியை செல்போனில் படமெடுத்து மிரட்டிய தம்பி; சிறையில் அடைப்பு

Colundan arrested for 'inviting' sister-in-law!

சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள பாரப்பட்டி மேச்சேரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகா (வயது 27) பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய சின்ன மாமனாரின் மகன் செல்வக்குமார் (வயது 32). எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார்.

Advertisment

இவர் அடிக்கடி தனது அண்ணன் வீட்டிற்குசென்று வந்தபோது அண்ணி கனகாவுடன் திருமணத்தை மீறிய உறவாக நெருங்கி பழகி வந்தார். கனகாவுக்கு தெரியாமலேயே அவரை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார்.

Advertisment

அந்தப் படங்களைக் காட்டி, தன்னோடு தனிமையில் இருக்கமிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால், அந்தப் படங்களை எல்லாம் பெரியப்பா மகளின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கனகா, இதுகுறித்து மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வக்குமார் மீது ஆபாசமாக படம் எடுத்தல், மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் செல்வக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe