Advertisment

படியில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

nn

அரசுப்பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தகல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச்சேர்ந்த மாதேஸ்வரன், விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். வழக்கம்போல் இன்று கல்லூரிக்குச் சென்ற மாதேஸ்வரன் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார். அப்பொழுது திடீரென தவறி சாலையில் விழுந்த மாதேஸ்வரன் மீது பேருந்து சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றிபிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இதேபோல் பள்ளி மாணவர் ஒருவர் படியில் தொங்கியபடி பயணம் செய்த நிலையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Aruppukkottai Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe