College students were amazed by copying the inscriptions

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டை கோயில் கல்வெட்டுகளை பேப்பரில் படியெடுத்தபின் எளிதாக படிக்க முடிந்ததை பார்த்து மாணவர்கள் வியந்தனர்.

பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் இருநாட்கள் நடந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு பயிற்சியை, கல்லூரி பொறுப்பு முதல்வர் ச.சிவகுமார் தொடங்கி வைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் வீ.கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார். இணைப் பேராசிரியர் ரா.வேலாயுதம் நன்றி கூறினார்.

College students were amazed by copying the inscriptions

Advertisment

ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முதல் நாள் ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடங்கள் பற்றி படங்களுடன் விளக்கினார். பின்பு நடந்த தமிழி கல்வெட்டுகள் பயிற்சியில் தமிழி எழுத்துகளை எழுதவும் படிக்கவும் பயிற்சியளித்தார். 2-ம் நாள் களப்பயணமாக ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை ஓவியங்களை பார்வையிட்டனர். பின்பு கள்ளிக்கோட்டை கோயிலில் நடந்த பயிற்சியில், கல்வெட்டுகளை படியெடுக்கும் முறைகளை மாணவர்களுக்கு வே.ராஜகுரு செய்துகாட்டினார்.

College students were amazed by copying the inscriptions

கல்வெட்டை சுத்தம் செய்து, மேப்லித்தோ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதன்மீது ஒட்டி, பள்ளமான எழுத்துகளில் பேப்பர் பதியுமாறு, பன்றி முடி பிரஸால் அடித்து, விலங்கு தோலில் செய்த திண்டில் கருப்பு மை தடவி, பேப்பர் மேல் ஒத்தி எடுத்ததும், கல்வெட்டை எளிதாக படிக்க முடிந்ததை பார்த்து மாணவ மாணவியர் வியந்தனர். அதேபோல் பள்ளமான கல்வெட்டு எழுத்துகளில் அரிசி மாவு தடவி படிக்கும் முறையையும் அவர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அறிவழகன், விஜயகுமார். பாரதி, மோகன கிருஷ்ணவேணி, மும்தாஜ் பேகம், ராமமூர்த்தி, உடற்கல்வி இயக்குநர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.