style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
சேலம் மாவட்டம் , சங்ககிரி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள் இன்று மாணவிகள் இருவர் வகுப்பறையில் இருக்கும் போது திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் உடனிருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து கதற தொடங்கினார்கள் உடனே கல்லூரி நிர்வாகம் தங்கள் வாகனத்தில் இரண்டு மாணவிகளையும் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தினார்கள் மன அழுத்தம் காரணமாக மாணவிகள் மயக்கமடைந்திருக்கலாம் என்றும் வேறு ஏதாவது பிரச்சனையா எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.