Advertisment

'ரூட் தல' பேனருடன் வந்த கல்லூரி மாணவர்கள்; தடுத்து நிறுத்திய போலீசார் 

College students with 'Root Thala' banner; Stopped by the police

Advertisment

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு சில மாணவர்கள் பேருந்தில் பேனருடன் வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு கல்லூரியின் கேட்டையும் மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் 'ரூட் தல' என்ற பேனருடன் பேருந்தில் வந்ததோடு ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக அங்கிருந்தபோலீசார் குறிப்பிட்ட மாணவர்களைத்தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்து அறிவுரை செய்த அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கிய நிலையில் அந்தந்த ரூட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறோம்என்ற பெயரில் தாமதமான நேரத்தில் ஊர்வலமாக பேனர் மற்றும் மாலையோடு கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். இதையறிந்த கல்லூரி முதல்வர்நுழைவாயிலை பூட்டுப் போட்டுவிட்டு சென்று விட்டார். அதனைத்தொடர்ந்து ஆவடியைச் சேர்ந்த சில மாணவர்கள் கையில் பேனர் உடன் ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.

avadi police
இதையும் படியுங்கள்
Subscribe