Advertisment

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து தொடரும் கல்லூரி மாணவ,மாணவிகள் போராட்டம்!

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கோர சம்பவம் தமிழகத்தில் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தபடியே இருக்கிறது.

Advertisment

அந்த வகையில் நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புகல்லூரியில் இன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்புகள புறக்கணித்து போராட்டம் நடத்தப்பட்டது.

PROTEST

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

போராட்டத்தில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 273 மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கயவர்கள் அனைவரையும் பாரபட்சமில்லாமல் கைது செய்திட வலியுறுத்தியும், அவர்கள் மீது கடும் சட்டத்தை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும்இவ்வழக்கினை சிபிஐ விசாரணையில் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும், அதேபோன்று இந்த விசாரணையில் சட்ட விதி 161ன் படி பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும்,என்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,பாலியல் வன்கொடுமையை புகைப்படத்தையும், வீடியோவையும் அழித்திடவும் வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் 900 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பங்கேற்றனர்.

College students pollachi sexual abuse protest
இதையும் படியுங்கள்
Subscribe