
கோவையில் சாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியதில்அதில் பயணித்தஇரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடைக்கானல் பகுதியைச்சேர்ந்த ஜோசப் அலெக்ஸ் மற்றும் சல்மான் ஆகிய இருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர். இருவரும் நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது ஈச்சனாரி பகுதி அருகேசாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனமானது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோவை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us