College students gang-attacked at bus station-Police investigation

கல்லூரி இளைஞர்கள் பேருந்து நிலையத்தில் கும்பலாகத்தாக்கிக் கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர். மதுபோதையில் இந்த மோதல் ஏற்பட்டதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் இது குறித்து கூறுகையில் “மது போதையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து பரம்பூரைச் சேர்ந்த வினோத் என்றஇளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதேபோல் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களிடமும் இது பற்றி விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் பகலில் அதுவும் மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கும்பலாக ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment