Skip to main content

ஆடிப்பெருக்கு..! மகளீர் கல்லூரியில் நடைபெற்ற அம்மன் திருவிழா..! (படங்கள்)

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

தமிழகம் முழுவதும் பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த விழாவின்போது பெண்கள் நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். 
 

தமிழரின் சிறுதெய்வ வழிபாட்டை நினைவுகூறும், சிறப்புமிக்க ஆடிப்பெருக்கு விழா சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின்போது மாணவிகள் பறையாட்டம், ஒயிலாட்டாம் போன்ற பாரம்பரிய நடனங்கள் ஆடியும், கயிறு இலுக்கும் போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும் மகிந்தனர். மேலும், மாணவிகள் பலர் அம்மன் வேடமணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.