Advertisment

வகுப்பறையில் மதுபானம் அருந்திய கல்லூரி மாணவிகள்!

College students drinking alcohol in the classroom!

Advertisment

வகுப்பறையில் மதுபானம் அருந்திய 10- க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் அமர்ந்துக் கொண்டு, குளிர்பானத்துடன் வெளிநாட்டு ரக மதுபானங்களைக் கலந்துக் குடித்திருக்கிறார்கள். இதனை வீடியோவாகவும் மாணவிகள் எடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில், வீடியோவானது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரைகளை வழங்கிய கல்லூரி நிர்வாகம், 10 மாணவிகளைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

Advertisment

கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோ, சக கல்லூரி மாணவிகளை மட்டுமின்றி அவர்களின் பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

students college
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe