Advertisment

கல்லூரி திறந்த முதல்நாளே ஓடும் ரயிலில் மாணவர்கள் மோதல்... கொரட்டூரில் பரபரப்பு!

 College students clash on a train on the first day of college opening!!

கரோனா தொற்று பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத்தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்புப் படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று (1-ம் தேதி) பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

Advertisment

இந்த நிலையில் சென்னையில் கொரட்டூர் பகுதியில் இருவேறு கல்லூரி மாணவர்கள் கல்லூரி திறந்த முதல்நாளான இன்றேமோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியிலிருந்து கொரட்டூர் செல்லும்ரயிலில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதால்சில மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாட இருப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னையிலுள்ளமாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ரயில் நிலையங்களிலும்மாணவர்கள் மோதல் போக்குகளில் ஈடுபடலாம் என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

இந்நிலையில் வியாசர்பாடியில் புறநகர் ரயிலில் ஏறிய 10 கல்லூரி மாணவர்கள் அதேபோல் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த 10 பேர் என இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்துஇருதரப்பைசேர்ந்த கல்லூரி மாணவர்களும் ஓடும் ரயிலிலேயேமோதலில்ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளான நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

police student college Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe