/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/222_22.jpg)
தேவக்கோட்டை பகுதியில் ஆடுகளைத் திருடியதாக ஆறு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை பகுதியில் சமீப காலமாக ஆடுகள் காணாமல் போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்தனர்.
அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆடு திருடியது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் ஆறு பேரும் திருவாடானையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் ஆடு திருடிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)