நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வயது 21 ,வெற்றி பெற்றுள்ளார்.

Advertisment

 College student wins election

மாலூர் தனியார் கல்லுரியில் பிபிஎ மூன்றாம் ஆண்டு படித்துவரும்இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்ப்பாளர்களை விட 210 வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்கு - 1170, எதிர்த்து போட்டியிட்டவரின் வாக்கு - 950, 210 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

மாணவியின் தந்தை ஜெயசாரதி, முன்னாள் K N தொட்டி ஊராட்சிதலைவர் ஆவார்.