
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அங்குக் கஞ்சா புழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த மாணவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தினர்.
அதில், “நான் கோவியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். இளம்பெண் ஒருவரையும் காதலித்து வருகிறேன். அவருடன் காதலியுடன் வெளியே சென்று ஊர் சுற்றுவதற்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், வீட்டில் தரும் பணம் எனது அன்றாட தேவைக்கே சரியாக இருக்கிறது. அதேசமயம் எனக்கு வருமான ஈட்டுவதற்கு வேறு வேலையும் இல்லை. இந்த நிலையில் தான், சில கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை குறித்து கூறினர். அதனால் நானும் கஞ்சா விற்பணையில் இறங்கினேன்.
ரூ.20 கொடுத்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, அதனை சிறிது சிறிதாக பிரித்து விற்பணை செய்து ரூ. 1 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவரின் நலன் கருதி ஜாமினில் வெளியே விட்டனர்.
காதலியுடன் வெளியே சுற்றுவதற்காக கல்லூரி இளைஞர் கஞ்சா விற்பணை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.