Advertisment

கல்லூரி மாணவி தற்கொலை; இளைஞரும், அவரது தாயாரும் கைது..!

College student passes away Young man and mother arrested ..!

Advertisment

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், கேசவ் குமார் (21) என்பவர் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்ட சூழலில், இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வைத்து ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் விடப்போவதாக மிரட்டி மாணவியிடம் பணம் பறித்து வந்துள்ளார் கேசவ் குமார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினரிடம் மாணவியின் தந்தை புகார் செய்தார். அதன் அடிப்படையில், மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கேசவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர் காவல்துறையினர். இந்நிலையில் கேசவ் குமாரையும், அவரது தாயார் மங்கையர்கரசி (46) என்பவரையும் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியதில், இளைஞரின் தாயார் மங்கையர்கரசியும் உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள போலீஸார், தற்கொலைக்குத் தூண்டியதாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe