Advertisment

தேர்வில் தோல்வி! மாணவனின் விபரீத முடிவு! 

College student passed away who failed in exam

Advertisment

இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவன், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு சுந்தர விலாஸ் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (48). இவரது மகன் விக்னேஸ்வரன் (22). இவர், திருச்சியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு டேட்டா சயின்ஸ் படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விக்னேஸ்வரன், மின்விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிறப்பு இன்ஸ்பெக்டர் அரசு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe