Advertisment

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

College student passed away in sea waves

சிதம்பரம் அடுத்த மஞ்சகுழி கிராமத்தைச்சேர்ந்தவர்சங்கர். இவரின்மகன் அன்பரசன்(22). பொறியியல் பயின்று வருகிறார். அவருடன் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் 21, 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை குளித்து கொண்டிருந்தனர்.இதில் அன்பரசன் எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கியுள்ளார்.

Advertisment

உடனடியாக அவரது நண்பர்கள் கடல் அலையில் சிக்கியவரை மீட்டு இருசக்கர வாகனத்தில் பி.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள்ஏற்கெனவே இறந்துவிட்டார் என உறுதிபடுத்திய நிலையில் அவரது சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் சுஜாதா சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்கு அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment
Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe