Advertisment

விஷம் கொடுத்து கொல்லப்பட்ட கல்லூரி மாணவி! உறவினர்கள் சாலை மறியல்! 

College student passed away relatives on struggle

திருச்சி மாவட்டம், பி.எச்.எல் பகுதியை சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வந்தார்.

Advertisment

இவர் கடந்த 12ஆம் தேதி மாலை 6 மணியளவில் கல்லூரி முடிந்து வீடு தனது பாட்டி வீட்டிற்கு திரும்பியபோது, அவரை மூன்று மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்கவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அவரது தாய் சாந்தி(45) கொடுத்த புகாரின் அடிப்படையில் பி.எச்.எல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த மாணவி கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகள் 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத நிலையில், அவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe