புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்களாகோயில் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. இவருக்கு 4 குழந்தைகள். நான்காவது மகள் ஆர்த்தி. நன்றாக படித்ததால் அவரை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி படிக்க வைத்துள்ளார். ஆர்த்தி தினமும் காலை 5.30 மணிக்கு அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து மூலம் கறம்பக்குடி சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் ஒரத்தநாடு சென்று படித்து வந்துள்ளார்.

Advertisment

The death of a girl who went to college

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வழக்கம் போல்நேற்றுவியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆர்த்தி கல்லூரிக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 2 மணி நேரம் கடந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஓடிச்சென்று ஆர்த்தியின் தலைமுடி, செருப்பு, பேக் ஆகியவை கிணற்றுக்கு அருகில் கிடப்பதாக கூறியுள்ளார்.

Advertisment

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை செல்லத்துரை வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கிணற்றடியில் சென்று பாரத்தபோது அங்கு ஆர்த்தியின் ஒரு செருப்பு, அறுக்கப்பட்ட தலைமுடி, பேக் ஆகியவை சிதறிய நிலையில் கிடந்தது.

ll

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தகவல் அறிந்து கிராமத்தினர் கூடினார்கள். கிணற்றுக்குள் பாதாளகரண்டி விட்டு அலசியும், இறங்கியும் தேடிப்பார்த்தனர். அப்போது பாதாளகரண்டியில் ஆர்த்தியின் உடல் சிக்கியது. வெளியே எடுத்து போட்ட போது உறவினர்கள் கதறி அழுதனர்.

அவரது உறவினர்கள் கூறும் போது.. ஆர்த்தி தலை முடியை அறுத்து சுடிதார் சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்துகிணற்றில் வீசி இருக்கிறார்கள். தினசரி அவரை பின்தொடர்ந்தவர்கள் செய்த வேலைதான் இது என்றனர்.

.

The death of a girl who went to college

The death of a girl who went to college

தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் ஆர்தியின் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி யார் என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபகாலமா புதுக்கோட்டை மாவட்டத்தில் இளம் பெண்கள்இப்படி கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொலையை செய்தவன் சைக்கோ கொலையாளியாஎனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.