திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(19).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது பற்றி அவரது தந்தை ஸ்டாலின் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் மாயமாகி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.