
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர் இரவு முழுவதும் மது அருந்திய நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ படித்து வந்த 19 மாணவி ஒருவர் ஏகாட்டூர் பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள தன்னுடைய தோழியின் அறைக்கு சென்றுள்ளார். வார விடுமுறையை கழிக்க மாணவி சென்றதாகக் கூறப்படும் நிலையில் இரவு முழுவதும் மாணவி மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
திடீரென மாணவிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் தோழியின் உதவியுடன் இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் மாணவி ஏற்கனவே இறந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.