சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கல்லூரி மாணவனை கடத்தி திருமணம் செய்ததாக இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்த மாணவனை காணவில்லை எனவும், எங்களது மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என மாணவனின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்பேரில் சேலம் கருப்பூர் போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவனை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் அரங்கனூர் பகுதியில் வசித்து வந்த பெண் திருமண வயதை எட்டாத மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்ததாக தகவல் கிடைக்க போலீசார் மாணவனை மீட்டனர். மேலும் அப்பெண்ணின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.