College student incident to passed away after entering house in Pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே கல்லூரி மாணவியை நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரவீன் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவி இன்று வீட்டில் தனியாக இருந்தபோது பிரவீன் அத்துமீறிய உள்ளே நுழைந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பிரவீன் கல்லூரி மாணவியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். பின்பு அங்கிருந்து பிரவீன் தப்பி ஓடியுள்ளார்.

Advertisment

பின்னர் கல்லூரி மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்த பிரவீன் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்து கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.