College student gang-incident near Kanchipuram; 4 arrested

Advertisment

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியைகூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெப்பமேடு குண்டுகுளம் பகுதியில் கிராமப் பகுதியை ஒட்டி வந்தவாசி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலைப்பகுதியை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் அமைந்துள்ளது. ஆனால், இடையிடையே வயல் மற்றும் காட்டுப்பகுதிகள் காணப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை தனியார் கல்லூரியில் பயின்று வரும்மாணவன்ஒருவர் இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த மாணவியைஅழைத்து வந்துகுண்டுகுளம் பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேர் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விமல், சிவக்குமார், தென்னரசு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.