கோவை வெள்ளலுாரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மகன் பிரமோஜ், 19, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மற்றும் கல்லுாரி நண்பர்கள், 11 பேருடன் ஆறு பைக்குகளில், மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறைக்கு மதியம் வந்தனர்.

college student drowns in Bhavani river!

Advertisment

அங்கிருந்த தடுப்புகளை மீறி விளாமரத்துார் சென்று அங்குள்ள ஆற்றில் குண்டுக்கல்துறை என்ற பகுதியில் தண்ணீரில் விளையாடினர். நீச்சல் தெரியாத நிலையில் பிரமோஜ் தண்ணீரில் மூழ்கினார். மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி, தண்ணீரிலிருந்து பிரமோஜின் பிரேதத்தை வெளியே எடுத்தனர்.

இந்த சம்பவத்தில்போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பை மீறி, ஆற்றுக்கு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்துமேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.