புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் மன்னவன் மகள் கவிதா (21). காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கவிதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரத்த பரிசோதனையில் அணுக்கள் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

death

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்து கவிதா வீட்டிற்கு வந்த உறவினர்கள் கதறி அழுதனர். அதே போல கவிதா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது சக நண்பர்கள், தோழிகள் வந்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் உள்ளது.