Advertisment

வங்கி மேலாளர் மீது கல்லூரி மாணவி புகார்

College student complains on bank manager!

கரூரில் பொறியியல் கல்லூரி மாணவியைக் காதலித்து, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் மீது மாணவி புகார் அளித்துள்ளார்.

Advertisment

கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணவி, தனது உறவினரின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த தனியார் வங்கியின் கரூர் கிளை மேலாளராகப் பணியாற்றிவரும் திருச்சி மாவட்டம் துறையூரைச் சார்ந்த சண்முகநாதன் என்பவருடன் கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

Advertisment

பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கல்லூரி மாணவியுடன் அவர் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வங்கி மேலாளர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுத்து தன்னை ஏமாற்றுவதாக அந்த மாணவி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe