College student arrested in Chennai student case

அண்மையில் கோவை மற்றும் கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி சிறுமிகள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சிறுமி உருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பதினோராம் வகுப்பு பயின்றுவந்த அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்ததகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், பழைய தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் மட்டுமே பேசிவந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக சிறுமி எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் 'பாலியல் தொல்லைகள் நிறுத்தப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ள சிறுமி, 'தாயின் கருவறையும் கல்லறையும்தான் பாதுகாப்பான இடம். உறவு முறைகளும் பள்ளியும் பாதுகாப்பு இல்லாதவை' எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisment

College student arrested in Chennai student case

அதே சிறுமி வீட்டில் மற்றொரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில், அவர் படித்துவந்த பள்ளி ஆசிரியையின் மகன் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்பட்டது., இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் விக்னேஷை என்பவரைபோலீசார் கைது செய்துள்ளனர். மாணவியிடம் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக சாட் செய்தது தெரியவர, கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.