கஞ்சா போதைக்கு அடிமையாகி அதனால் ஏற்பட்ட கடன் சுமையை செலுத்தமுடியாமல் ஆளில்லா நேரத்தில் வீடு புகுந்துகைவரிசை காட்டிய கல்லூரி மாணவனைபோலீசார் கைது செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2439263953" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை கொத்தவால்சாவடியைசேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்துடன் திருப்பதி சென்று விட்டு வீடு திரும்பிய போது பூட்டியிருந்த வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பத்து சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவரகாவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி அதன் காட்சிகளை பரிசோதித்தபோது இளைஞன்ஒருவன் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அவன்பெயர் தர்ஷன் என்பதும் வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறான்என்பது தெரியவந்தது.
அவனை பிடித்து போலீசார் மேற்கொண்டவிசாரணையில், தர்சன்வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருவதும், கஞ்சா போதைக்கு அடிமையானதால் அதனால் ஏற்பட்ட கடன் சுமையினால் ஏற்பட்ட 50 ஆயிரம் ரூபாய் கடனை கட்டுவதற்காக திருட்டில் ஈடுபட்டதும்தெரிய வந்துள்ளது.