திருச்சியில் இளம் பெண்களுடன் பிளேபாய் போல் உல்லாசமாக சுற்றி வந்த கார் டிரைவர் ரமேஷ் வலையில் வீழ்ந்த நர்சிங் மாணவியுடன் விஷம் குடித்து காவிரிக் கரையோரம் இரண்டு பேரும் இறந்து கிடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரமேஷ் (வயது 31). சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். இவர், தென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவியா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரமேஷ், ஒரு இளம்பெண்ணுடன் திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு காரில் வந்தார். அந்த பெண்ணுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் இரண்டு பேரும் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனை, அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இருவரும் இறந்து விட்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக காரில் போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 செல்போன்கள் இருந்தன.
அதனையும், காரையும் போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ரமேஷ் உடன் தற்கொலை செய்து கொண்டது, திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் ரீனா (18) என்பதும், அவர் புத்தூர் பகுதியில் மருத்துவ கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்ததும், அவ்வப்போது ரமேசின் காரில் சென்று வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டதும், நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகவும் தெரிய வந்தது.
ஆனால், அவர்களது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிந்து விட்டதால், இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ரமேஷ் திருமணத்துக்கு முன்பே பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததும், இதனால் போலீஸ் நிலையத்தில் நிறைய வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
யாரேனும் திட்டமிட்டு விஷம் கொடுத்து கொன்று விட்டார்களா? அல்லது ஏற்கனவே ரமேஷால் பாதிக்கப்பட்ட பெண்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தி விட்டார்களா?என்ற கோணங்களில் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கிறது.
டிரைவர் ரமேஷ் பரிதாபமாக இறந்த நிலையில் அவருடைய இளம் மனைவியும் ஏழு மாதக் குழந்தையும் தற்போது நிற்கதியாக அனாதையாக இருப்பது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.