chennai high court

தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை நிலுவையை உடனே தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச் செயலாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே செலுத்துகிறது.

Advertisment

ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தாமல்,தற்போதுவரை நிலுவையில் உள்ளது. எனவே, உடனடியாக நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தைத் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தர வேண்டும்.

மேலும், இதுபோல கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தருவதற்கான கால நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் விஜயானந்த் ஆஜராகி வாதாடினார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, வழக்கு குறித்து நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.